உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 500 மீ., இழுத்து செல்லப்பட்ட காரில் சிக்கிய பெண் உடல்

500 மீ., இழுத்து செல்லப்பட்ட காரில் சிக்கிய பெண் உடல்

பல்லடம்: ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில், பலியான பெண்ணின் உடலை அரை கி.மீ., துாரத்திற்கு காரில் சிக்கி இழுத்துச் சென்ற பரிதாபம் நடந்தது.கோவை அருகே சரவணம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி சுப்புலட்சுமி, 40. நேற்று முன்தினம் இரவு, ஸ்கூட்டரில், பல்லடம் வழியாக- கோவை சென்றார். அவரை தொடர்ந்து, கிருஷ்ணகுமார், 34, என்பவர் பைக்கில் சென்றார்.அய்யம்பாளையம் பிரிவில், பல்லடம் வழியாக- கோவை நோக்கி சென்ற கார், பைக் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், கிருஷ்ணகுமார் காயங்களுடன் தப்பினார்.ஸ்கூட்டரில் இருந்து துாக்கி வீசப்பட்ட சுப்புலட்சுமி, காரின் முன் பகுதியில் சிக்கி இறந்தார். அவரது உடல் காரில் சிக்கி, அரை கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டது. கே.என்., புரம் நால்ரோடு அருகே காரில் இருந்து உடல் விழுந்தது.நிற்காமல் சென்ற காரை, காரணம்பேட்டை செக்போஸ்ட் பகுதியில் பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரை ஓட்டி வந்த சோமனுாரை சேர்ந்த பழனிசாமி மகன் சதீஷ்குமார், 40, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ