உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.1.44 கோடி மதிப்பில் பணிகள் துவக்கம்

ரூ.1.44 கோடி மதிப்பில் பணிகள் துவக்கம்

அவிநாசி; அவிநாசி ஒன்றியம், சின்னேரிபாளையம், பழங்கரை, தத்தனுார் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.சின்னேரிபாளையம் ஊராட்சியில், கூட்டப்பள்ளி ரோடு முதல் வலையபாளையம் வரை, 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்தல் பணிகள், பழங்கரை ஊராட்சியில் அவிநாசிலிங்கம்பாளையம் இந்திரா காலனி பகுதியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்தல், நீலகிரி எம்.பி., ராஜா, தொகுதி உறுப்பினர் வளர்ச்சி நிதியில் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில், 9 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட மொத்தம் ஒரு கோடியே 44 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் (கிராமம்), தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாஷ், பழனிசாமி, பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை