மேலும் செய்திகள்
தொழிலாளர் போராட்டம்
15-Aug-2025
பல்லடம்: பல்லடம் அருகே லாரி மோதி 6 வயது குழந்தை உயிரிழந்தது. ஆத்திரமடைந்த உறவினர்கள், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீஹாரின் ஆரே பகுதியை சேர்ந்தவர் சுராஜ் பஸ்வான், 25; திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை, லட்சுமி நகரில் வசித்து, பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். உறவினர் குழந்தையான, பிஹூ குமாரி, 6, என்ற சிறுமியை பராமரித்து வந்தார். நேற்று காலை, லட்சுமி நகரில், ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிஹூ குமாரி, திடீரென ரோட்டை கடக்க முயன்ற போது, லாரி மோதி பலியானார். ஆவேசமடைந்த சிறுமியின் உறவினர்கள், வடமாநில தொழிலாளர்கள், லாரியை சிறைபிடித்து, டிரைவரை தாக்க முயன்றனர். லாரி டிரைவர், உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் போலீசார் பேச்சு நடத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் விரட்டி அடித்தனர். குழந்தை திடீரென ரோட்டை கடக்க முயன்றதே விபத்துக்கு காரணம் என, போலீசார் கூறினர். 4 வயது சிறுமி பலி புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளக்கொல்லையை சேர்ந்த விவசாயி ராமராஜன் மகள் சஞ்சனாஸ்ரீ, 4. நேற்று காலை, வீட்டு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, லெம்பலக்குடியிலிருந்து, எம்.சாண்ட் ஏற்றி, வன்னியன்விடுதி நோக்கி சென்ற டிப்பர் லாரி, சிறுமி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சிறுமியை குடும்பத்தினர் மீட்டு, ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தார். ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்து, மறமடக்கியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் கவிநாவரசன், 25, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
15-Aug-2025