உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிலுவை சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நிலுவை சம்பளம் கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ;வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர், உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் சங்க நிர்வாகி பாப்பாத்தி தலைமையில் போராட்டம் நடந்தது.இதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும், நிலுவை இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு சட்டத்தின்படி, வேலையின்மைக்கான படி வழங்க வேண்டும்.ஓராண்டுக்கான வேலை நாட்களை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தலைவர் நந்தகோபால், இ.கம்யூ., கட்சி திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் இசாக், குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பு செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ