வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அரசாங்கம் இவர்களுக்கு கொஞ்சம் உதவலாம் கொஞ்சம் என்ன அதிகமாக உதவலாம் இல்லையென்றால் ஏழைகளுக்கு கோவணமும் மிஞ்சாது
மேலும் செய்திகள்
முடங்கியது கைத்தறி நெசவு நெசவாளர்கள் ஆலோசனை
17-Aug-2024
உடுமலை : கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்து வருவதால், அதனை மீட்கவும், நெசவுக்கு உரிய கூலி வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை மலையாண்டிபட்டணம், உடுக்கம்பாளையம், பூளவாடி, வாளவாடி, குரல்குட்டை, குள்ளக்காபாளையம், கணியூர், காரத்தொழுவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதிகளில், பட்டுச்சேலை, சாப்ட் சில்க், டர்னர், முந்தி, பார்டர் என ஏராளமான ரகங்களில், நுால், பட்டு நுால் கொண்டு கைத்தறி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.ஒரு காலத்தில், கூட்டுறவு சங்கங்கள், சர்வோதயா சங்கம் உள்ளிட்டவை வாயிலாக, கைத்தறி நெசவாளர்களுக்கு நுால்கள் வழங்கி, கூலி அடிப்படையில் சேலையாக உற்பத்தி செய்யப்பட்டது.தற்போது, அரசு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள் குறித்து கண்டு கொள்ளாத நிலையில், வியாபாரிகளுக்கு கூலிக்கு நெசவு செய்து தருகின்றனர். தற்போது, இப்பகுதிகளில், 4 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான சேலைகள் உறபத்தி செய்யப்பட்டு வந்தாலும், நுால் விலை, இடு பொருட்கள் விலை உயர்வு, கைத்தறி சேலைகள் மீதான ஆர்வம் குறைந்து, விற்பனை குறைந்துள்ளதால், நெசவாளர் குடும்பங்களுக்கு உரிய வேலை வாய்ப்பு கிடைக்காததோடு, கூலியும் கிடைக்காமல் பாதித்து வருகின்றனர். விலை உயர்வு
நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:இத்தொழில் மட்டுமே ஆதாரமாக உள்ள நிலையில், தற்போது இயந்திரங்கள் வருகை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. இருப்பினும், பட்டு, மென் பட்டு, காட்டன் சேலைகள் என தரமான கைத்தறி சேலைகள், பல்வேறு வண்ணங்கள், டிசைன்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.வண்ண மயமான சேலைகள் உற்பத்தி செய்தாலும், உரிய கூலி கிடைக்காமல், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் குடும்பங்கள் பாதித்து வருவதோடு, பெரும்பாலானவர்கள் மாற்றுத்தொழிலுக்கு மாறும் சூழல் உள்ளது.வியாபாரிகள் தரும் நுால் மற்றும் டிசைன் அடிப்படையில், ஒரு சேலை உற்பத்திக்கு, 3 நாட்கள் தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள, மூன்றுபேர் வரை வேலை செய்ய வேண்டும். இதற்கு, தற்போது, 1,800 ரூபாய் வரை மட்டுமே கூலி கிடைக்கிறது.ஒரு குடும்பமே உழைத்தாலும், தற்போதைய விலைவாசி உயர்வால், குடும்பத்தை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. குடும்ப தொழில்
அதோடு, கைத்தறி சேலை உற்பத்திக்கான நுால் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், விற்பனை சந்தைகள் குறைந்துள்ளதோடு, கைத்தறி சேலைகள் விற்பனையும் சரிந்துள்ளது.இதனால், வியாபாரிகள் சேலை உற்பத்தியை குறைத்து வருவதால், மாதத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை கிடைத்து வருகிறது. இதனால், வேலையில்லாமலும், பாதித்து வருகிறோம்.கைத்தறி தொழிலை மீட்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுால் முதல் விற்பனை வரை கவனம் செலுத்த வேண்டும். நடவடிக்கை தேவை
கைத்தறி ரகங்கள் விற்பனையில், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள துறை கவனம் செலுத்துவதோடு, தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கைத்தறி நெசவாளர்கள் பயன்பெற கொண்டு வரப்பட்ட இலவச வேஷ்டி, சேலை வழங்கும் திட்டமும், தற்போது, இயந்திரங்கள் வாயிலாக உற்பத்தி செய்யப்படுகிறது.முறையாக கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், கூலிக்கு சேலை நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய கூலி வழங்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
அரசாங்கம் இவர்களுக்கு கொஞ்சம் உதவலாம் கொஞ்சம் என்ன அதிகமாக உதவலாம் இல்லையென்றால் ஏழைகளுக்கு கோவணமும் மிஞ்சாது
17-Aug-2024