உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஊர்க்காவல் மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் மண்டல தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

உடுமலை; திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூர் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்விதகுதி, பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக இருக்க வேண்டும்.வயது வரம்பு, 21 வயது முதல், 50 வயதுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு கவுரவ பதவி என்பதால், ஊதியம் ஏதும் வழங்கப்பட மாட்டாது.சமூகத்தில் நன்மதிப்புள்ள, சேவை மனப்பான்மை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை சுய விவரக்குறிப்புடன், 'போலீஸ் எஸ்.பி., அலுவலகம், திருப்பூர் மாவட்டம்,' என்ற முகவரிக்கு வரும், 7 ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கலாம் அல்லது அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.கூடுதல் விபரங்களுக்கு, 94981-74526 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி