உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லாரி மோதி இளைஞர் பலி; அவிநாசி அருகே பரிதாபம்

லாரி மோதி இளைஞர் பலி; அவிநாசி அருகே பரிதாபம்

அவிநாசி : அவிநாசி அருகே கருமாபாளையம் - தண்ணீர் பந்தல் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் மகன் கார்த்திக், 25. இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இரவுப்பணி முடிந்து நேற்று அதிகாலை கோவையிலிருந்து அவிநாசி நோக்கி தனது பைக்கில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, தெக்கலுார் - வடுகபாளையம் பிரிவு அருகே சர்வீஸ் ரோட்டில் இருந்து சேலம் கோவை பைபாஸ் ரோட்டுக்கு லாரி ஒன்று சிக்னல எதுவும் தராமல் மேலே ஏறி பைபாஸ் ரோட்டுக்கு திடீரென சென்றது. இதனை கவனித்த கார்த்திக் தனது பைக்கை நிறுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும், தடுமாறி லாரியின் பின்னால் பலமாக தலை மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸில் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்ததில் கார்த்திக் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !