மூதாட்டியிடம் 5 சவரன், பணம் கொள்ளை
வந்தவாசி,:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஊத்துக்குளத்தை சேர்ந்தவர் புஷ்பா, 65. பெட்டி கடை வைத்து, தனியாக வசிக்கிறார். நேற்று அதிகாலை 2:00 மணியளவில் மூதாட்டி வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள்,புஷ்பா படுத்திருந்த தலையணையின் கீழ் இருந்த சாவியை எடுத்து, வீட்டில் பீரோவை திறந்து அதிலிருந்த, 5 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர். பின், புஷ்பாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றபோது, அவர் கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். தெள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.