உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை /  காதல் திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்பு

 காதல் திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்பு

செய்யாறு: செய்யாறு அருகே, காதல் திருமணம் செய்த வாலிபர், மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, கீழ்நேத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா, 22. இவர், சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். இவரது மனைவி அனிதா, 19. இருவரும், எட்டு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். டிச., 21-ல் அழிவிடை தாங்கியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றார். பின், வெளியே செல்வதாக கூறி சென்றவர், வீடு திரும்பவில்லை. பிரம்மதேசம் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், நேற்று பாண்டியம்பாக்கம் -- சித்தாத்துார் செல்லும் சாலை பாலத்தின் கீழே, ராஜா பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். துாசி போலீசார், உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி