உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / தி.மலை கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தி.மலை கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் நேற்று வந்துள்ளது. இதையடுத்து, திருவண்ணாமலை கிழக்கு ஸ்டேஷன் போலீசார், 'தென்றல்' என்ற மோப்ப நாய் கொண்டு கலெக்டர் அலுவலகம் மற்றும் வெளிப்பகுதி முழுவதும் சோதனை நடத்தினர்.அதில், வெடிகுண்டு எதுவும் சிக்காததால், வெறும் வதந்தி என தெரியவந்தது. இதனால், நேற்று மதியம், 12:00 மணி முதல், 2:00 மணி வரை, கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை