செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு
செங்கம், செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சார்பதிவாளர் அலுவலக சார்பதிவாளர் சிவசங்கரன். இந்த அலுவலகத்தில், பத்திர பதிவு செய்ய வருவோரிடம் லஞ்சம் கேட்பதாக, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் சென்றது. அதன்படி, இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனை அன்றிரவு, 11:00 மணி வரை நடந்தது. அப்போது கணக்கில் வராத, 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், பத்திரப்பதிவு செய்த ஆவணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்காமல் இருந்தது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.