மேலும் செய்திகள்
வாலிபர் அடித்துக்கொலை நண்பர்கள் 3 பேர் கைது
21-Aug-2025
செய்யாறு:செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறில், வெல்டிங் தொழிலாளியை கொன்று புதைத்த நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, புரிசை கிராமத்தை சேர்ந்தவர் அப்சல், 22. இவர், திருத்தணியில் தங்கி, வெல்டிங் தொழில் செய்து வருகிறார். அவர், மூன்று மாதமாக வீட்டிற்கு வராததால், அவரது தாய் ஜாஹிரா, செய்யாறு போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம், செய்யாறு அடுத்த தென்பூண்டிபட்டு ஏரியில், கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் கிணற்றின் அருகே, பாதி புதைக்கப்பட்ட நிலையில், அப்சல் சடலமாக கிடந்தது தெரிந்தது. மோரணம் போலீசார் விசாரித்தனர். இதில், அப்சல் போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். ஆக., 21ல் பெருங்கட்டூரில், கஞ்சா தொழிலில் ஈடுபட்ட நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில், அப்சல் மயங்கி விழுந்துள்ளார். அவரை தென்பூண்டிபட்டு ஏரிக்கு துாக்கி சென்ற அவரது நண்பர்கள், கை, கால்களை உடைத்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்து, குழிதோண்டி உடலை புதைத்துள்ளனர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
21-Aug-2025