உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மூதாட்டி வாழ்வாதாரத்துக்கு அ.தி.மு.க., உதவி

மூதாட்டி வாழ்வாதாரத்துக்கு அ.தி.மு.க., உதவி

திருச்சி : திருச்சி அரசு மருத்துவமனை வாசலில் கஸ்துாரி, 60, என்ற மூதாட்டி நோயாளிகளுக்கான துண்டு, கைக்குட்டை, கைலி, பிறக்கும் குழந்தைகளுக்கான மை, சங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஆதரவற்ற அந்த மூதாட்டியின் வறுமை நிலை குறித்து, நம் நாளிதழின் சொல்கிறார் பகுதியில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார் மூதாட்டி வாழ்வாதாரத்துக்கு உதவியுள்ளார். அரசு மருத்துவமனையில் மூதாட்டி கஸ்துாரியை சந்தித்து, அவர் மீண்டும் வியாபாரம் செய்ய, 5,000 ரூபாயை வழங்கினார். அவருக்கு துணிகள் வழங்கி, மேலும் உதவி தேவைப்பட்டால், தன்னை அணுகுமாறு கூறி சென்றார். அ.தி.மு.க., நிர்வாகிகளின் செயல் பாராட்டை பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ