மாணவியிடம் ஆபாச பேச்சு கல்லுாரி பேராசிரியர் கைது
திருச்சி:மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருச்சி அருகே மணிகண்டம் தனியார் கல்லுாரியில், 17 வயது மாணவி முதலாமாண்டு படிக்கிறார். அந்த மாணவியிடம், அதே கல்லுாரி பேராசிரியரான, திருச்சி கே.கே.நகரை சேர்ந்த தமிழ், 53, செப்., 13ல், ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி புகாரின்படி, தமிழை திருவெறும்பூர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.