வாசகர்கள் கருத்துகள் ( 1 )
18005991500 toll free நம்பர் TNSTC drivers பற்றி instant complaint பண்ணலாம் 24×7 helpline
திருச்சி : மொபைல் போனில் படம் பார்த்தபடி, அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கரூருக்கு அரசு பஸ் சென்றது. கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த 'ஏசி' பஸ்சில் கண்டக்டர் பணியிடம் இல்லாததால், டிரைவர் சரவணன், பஸ்சில் இருந்த 20 பயணியருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு, பஸ்சை இயக்கி உள்ளார். திருச்சி எல்லையான பெட்டவாய்த்தலை அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, வலது கையில் மொபைல் போனை பிடித்து படம் பார்த்தவாறு, அவர் பஸ்சை ஓட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த பயணியர் டிரைவரை கண்டித்துள்ளனர். பயணி ஒருவர், டிரைவரின் அலட்சியத்தை மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.போக்குவரத்து கழக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் விசாரித்து, டிரைவர் சரவணனை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
18005991500 toll free நம்பர் TNSTC drivers பற்றி instant complaint பண்ணலாம் 24×7 helpline