உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்

கண்டித்த தாயை அடித்து கொன்ற போதை மகன்

திருச்சி:மது குடிப்பதை கண்டித்த தாயை கட்டையால் அடித்துக் கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே, காமாட்சிபட்டியை சேர்ந்தவர் அமராவதி, 75, கணவரை இழந்தவர். இவரது மகன் வேலுமணி, 47, வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித்திரிந்த மகனை, அவரது தாய் கண்டித்தார். இதில், ஆத்திரமடைந்த மகன், நேற்று முன்தினம் இரவு, வீட்டு வாசலில் துாங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் கட்டையால் அடித்து, அவரை கொலை செய்தார்.வீட்டின் முன், காயத்துடன் மூதாட்டி இறந்து கிடப்பது குறித்து, அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டுக்குள் இருந்த வேலுமணியை பிடித்து விசாரித்த போது, தாயை அடித்துக் கொலை செய்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல், வீட்டுக்குள் இருந்தது தெரிந்தது. முசிறி போலீசார். வேலுமணியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ