உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து எஸ்கேப்

ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து எஸ்கேப்

திருச்சி:'போக்சோ' வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறையில் இருந்தவர், தப்பிச் சென்றார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 49, போக்சோ வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, 2023 ஜூலை, 31 முதல், திருச்சி மத்திய சிறையில் இருந்தார்.இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஆறு கைதிகளை, சிறைக்காவலர் தினேஷ் என்பவர், மத்திய சிறை வாசலில் உள்ள பிரிஷன் பஜார் கேன்டீனில் வேலைக்கு அழைத்து வந்தார்.காலை, 8:30 மணிக்கு, ராஜேந்திரன் அங்கு இல்லை. சிறைக்காவலர்கள் தேடியும் கிடைக்கவில்லை. அவர் தப்பிச் சென்றது தெரிந்தது.இதையடுத்து சிறைக்காவலர்கள் கும்பகோணம் பகுதிக்கு சென்று, அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை