உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கண்ணாடி துண்டுகளை விழுங்கிய கைதி அட்மிட்

கண்ணாடி துண்டுகளை விழுங்கிய கைதி அட்மிட்

திருச்சி: சிறையில் கண்ணாடி துண்டுகளை விழுங்கிய கைதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன், 25. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். நேற்று முன்தினம், சிறையில் கண்ணாடியை உடைத்து, அதன் துண்டுகளை விழுங்கியுள்ளார். சிறைத்துறை போலீசார், மகேஸ்வரனை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர், சில வாரங்களுக்கு முன், ஊசியை விழுங்கி விட்டதாக கூறி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை