கல்லால் தாக்கப்பட்டு தொழிலாளி கொலை
திருச்சி: திருச்சி அருகே நாடக மேடையில் துாங்கியவர் தலையில், கல்லை போட்டு கொன்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். திருச்சி மாவட்டம், நாகமங்கலம் அருகே களிமங்கலத்தை சேர்ந்தவர் துரை, 46. கூலி தொழிலாளி. இவர், 15 ஆண்டுகளாக தன் குடும்பத்தை பிரிந்து, நாகமங்கலத்தில் தனியே வசித்தார். குடி பழக்கம் கொண்ட துரை, நேற்று முன்தினம் இரவு போதையில், அப்பகுதியில் உள்ள நாடக மேடையில் துாங்கி உள்ளார். நேற்று காலை, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். மணிகண்டம் போலீசார் விசாரிக்கின்றனர்.