உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  பான் கார்டு மூலம் ரூ.3 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

 பான் கார்டு மூலம் ரூ.3 கோடி மோசடி மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

வேலுார்: குடியாத்தம் அருகே, 'பான்' எண்ணை பயன்படுத்தி, மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து புகார் அளிக் கப்பட்டது. வேலுார் மாவட்டம், செதுக்கரையை சேர்ந்தவர், 23 வயது வாலிபர்; தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர், வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கூறப்பட்டிருப்பதாவது: என் ஆதார் மற்றும் பான் கார்டை பயன்படுத்தி, என் பெயரில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம், மர்ம நபர்கள் ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை உருவாக்கி, அதே ஆண்டு ஜூன் மாதம் வர்த்தகத்தை முடித்துள்ளதாக ஆவணங்களில் தெரிய வருகிறது. என் ஆதார் மற்றும் பான் பதிவு எண்ணை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., பதிவு எண்ணை நான் உருவாக்கவில்லை. என் ஆவணங்களை பயன்படுத்தி, மூன்று கோடி ரூபாய் வரை மர்ம நபர்கள் ஜி.எஸ்.டி., மோசடி செய்துள்ளனர். இதனால், என் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எனவே, என் ஆவணங்களை தவறாக பயன்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த அதிகாரிகள், அதன் மீது நடவடிக்கை எடுக்க, குடியாத்தம் போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ