உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கள்ளக்காதலி புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்டவர் கைது

கள்ளக்காதலி புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்டவர் கைது

குடியாத்தம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் குபேந்திரன், 33; தனியார் நிறுவன ஊழியர். மனைவி, இரு மகன்கள் உள்ளனர். இவருடன், வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த திருமணமான, 31 வயது பெண் பணியாற்றினார்.இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. பெண்ணின் வீட்டுக்கு தெரிந்து கண்டித்ததால், குபேந்திரனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். ஆத்திரமடைந்த குபேந்திரன், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். குடியாத்தம்டவுன் போலீசார், குபேந்திரனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !