உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.8 லட்சம் ரொக்கம் பறிமுதல்

திண்டிவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.8 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மயிலம் : திண்டிவனத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரொக்கம், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சந்தைமேடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவு செய்வதற்கு அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதன் பேரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு தணிக்கை அலுவலர் ராணியின் மேற்பார்வையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பொறுப்பு டிஎஸ்பி., வேல்முருகன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், சக்கரபாணி மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர்.இதில் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் இரண்டு வெள்ளி குங்குமசிமிழ், வெள்ளி தட்டு ஒன்றை போலீசார் போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின்போது, திண்டிவனம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கோவிந்தம்மாள், 48; தன்னுடைய நிலத்தை விற்ற ரூபாய் ரூ.40 லட்சத்தை வைத்திருந்தார். இதை அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தவுடன் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆவணங்களை சரி பார்த்தவுடன் கோவிந்தம்மாளிடம் அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர்.சோதனையின் போது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் சப் ரிஜிஸ்டாராக பணியில் இருந்த சித்ராவிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று பிற்பகல் 2:30 மணியிலிருந்து இரவு 7:30 மணி வரையில் சோதனை; நடத்தினர். சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர்கள் கூறுகையில்,'' தீவிர புலன் விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்ய பட்டு துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்தனர். தற்போது நடந்த சோதனை நடந்த பத்திரபதி அலுவலகத்தில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தியுள்ள நிலையில், தற்போது நேற்று மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை