உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேளாண் அதிகாரிகள் வயல்களில் ஆய்வு

வேளாண் அதிகாரிகள் வயல்களில் ஆய்வு

செஞ்சி: வல்லம் ஒன்றியத்தில் உளுந்து மற்றும் பனிப் பயிர் வயல்களில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.'பெஞ்சல்' புயலின் போது, வல்லம் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பனிப்பயிர், உளுந்து பயிர்கள் அழுகின. அந்த பயிர்களை நிலத்தில் இருந்து அகற்றாமல் விவசாயிகள் மீண்டும் உழவு செய்து அதே பயிர்களை விதைத்தனர். சில இடங்களில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயும், பனிப் பயிரில் மஞ்சள் கொடி எனப்படும் கஸ் குட்டா களைச்செடிகளும் காணப்படுகின்றன.தகவலறிந்த வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில், மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவரசன், நோயியல் துறை பேராசிரியர் சஞ்சீவ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாட்டார்மங்கலம், மேல்சேவூர், திருவம்பட்டு, கொங்கரப்பட்டு, மொடையூர், மருர் ஆகிய பகுதி வயல்களில் ஆய்வு செய்தனர்.பின், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினர். துணை வேளாண் அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண் அலுவலர் ஹரிதாஸ், தொழில்நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி, முன்னோடி விவசாயிகள் ஜங்கால், சக்திவேல் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ