உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

திருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, நகர செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வினோத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பூத் கமிட்டி கூட்டத்தை நடத்தி வைத்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் வெங்கடாஜலபதி, நகர ஜெ., பேரவை செயலாளர் நித்யானந்தன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ