மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
06-Sep-2024
திண்டிவனம் : அகூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. திண்டிவனம் அருகே அகூர் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் 23- 24ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது.அகூர் ஊராட்சி தலைவர் வீரசம்பத் தலைமை தாங்கி, பள்ளியின் தலைமையாசிரியர் ராமமூர்த்தி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பேச்சுப் போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
06-Sep-2024