மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 எருமைகள் பலி
27-Aug-2024
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாக சாலையில் வலம் வரும் எருமை மாடுகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.விழுப்புரம் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பல்வேறு அரசு அலுவலகங்களும், உயர் அதிகாரிகளின் குடியிருப்புகள், பொதுமக்களின் குடியிருப்புகளும் உள்ளது. இதையொட்டி, இந்த சாலையை பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் வாகனங்களில் பயன்படுத்துகின்றனர். வளாக சாலையில், சில தினங்களாக இரவு நேரங்களில் எருமை மாடுகள் பல கூட்டமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.பொதுமக்கள் பயணிக்கும் இந்த முக்கிய சாலையில் எருமை மாடுகள் வலம் வருவதால், இரு சக்கர வாகனங்களில் அச்சத்துடன் செல்கின்றனர்.மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் மாடுகளை பிடிப்பதோடு, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Aug-2024