உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரகம் குவிண்டால் ரூ.2,450 நிர்ணயம் 

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சன்னரகம் குவிண்டால் ரூ.2,450 நிர்ணயம் 

விழுப்புரம் : அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் சன்னரகம் 2,450 ரூபாய், பொது ரகம் 2,405 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் 92 இடங்களில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் அதிகபட்ச விலையாக ஒரு குவிண்டால் (100 கிலோ) ஏ.டி.டீ 38, கோ 51, ஏ.டி.டீ 43, ஏ.டி.டீ 45, ஏ.டி.டீ 42, கோ 43, வெள்ளை பொன்னி, ஏ.டி.டீ 36 ஆகியவை சன்னரகம் 2,450 ரூபாய் மற்றும் சி.ஆர் 1009, ஏ.டி.டீ 44, எம்.டி.யூ 5, டி.ஆர்.ஒய் 1, டி.ஆர்.ஒய் 2 ஆகியவை பொதுரகம் 2,405 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.நெல் கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல் வி.ஏ.ஓ., சான்று பெற்று, இத்தகவலை இ-டி.பி.சி., மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளர்கள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பெருவிரல் கைரேகை பதிவு மூலம் தங்கள் நெல்லை விற்பனை செய்யலாம். அவ்வாறு இயலாத பட்சத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மூலம் ஓ.டி.பி., எண் வரப்பெற்றவுடன் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம்.கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, அந்த படிவத்தை வி.ஏ.ஓ., ஒப்பம் பெற்று கொள்முதல் கையடக்க கருவியில் விபரங்களை கொள்முதல் அலுவலக பணியாளர்கள் உதவியுடன் www.tncsc--edpc.tn.gov.inஎன்கிற இணைய தளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.நெல் கொள்முதலுக்குரிய தொகையினை சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னனு பணப்பரிமாற்றம் மூலம் நேரடியாக செலுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை