அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அனிச்சம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் ஜனகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் சுதா, கலைச்செல்வி, சேகர், பிரபாவதி, கவிதா முன்னிலை வகித்தனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில குழு உறுப்பினர் ஆசைதம்பி பங்கேற்று, மாணவர்களுக்கு, பட்டம் இதழ்களை வழங்கினார். மாவட்ட தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் சிவனேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.