உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தி.மு.க., நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம்

தி.மு.க., நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம், ;விழுப்புரத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் நகர நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, நகர அவைத் தலைவர் கற்கபகமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் சக்கரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'வரும் தேர்தலில் வானுார் தொகுதியை மீட்டெடுப்பதோடு, விழுப்புரம் தொகுதியிலும் வென்று தமிழக முதல்வரின் பாதங்களில் சமர்பிக்க வேண்டும்' என்றார்.நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, தொண்டரணி கபாலி, பொதுக்குழு பஞ்சநாதன், கவுன்சிலர்கள் புருஷோத்தமன், மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி