மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
02-Mar-2025
செஞ்சி : விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடந்தது.நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடியை வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நிர்வாகிகள் சங்கர், நெடுஞ்செழியன், சர்தார், கவுன்சிலர்கள் ஜான் பாஷா, பொன்னம்பலம், நுார்ஜகான் ஜாபர், மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி, தொண்டரணி அமைப்பாளர் பாஷா பங்கேற்றனர்.
02-Mar-2025