மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்திக்கு இந்தாண்டு ஸ்பெஷல்!
01-Sep-2024
விழுப்புரம் : விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரத்தில் ஓவிய ஆசிரியை மற்றும் மாணவிகள் அசத்தலான விநாயகர் ஓவியங்களை தீட்டியுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள், களிமண் விநாயகர் தயார் செய்யப்பட்டு, வழிபாட்டிற்கும், விற்பனைக்கும் தயார் நிலையில் உள்ளது.இந்த நிலையில், விழுப்புரம், பானாம்பட்டு, பாலாஜி நகரைச் சேர்ந்தசாந்தா அன்புசிவம் என்பவர், தனது மாணவிகளைக் கொண்டு அசத்தலான விநாயகர் ஓவியங்களை தீட்டியுள்ளார்.சிகா மேல்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணிபுரியும் இவர், தன்னிடம் ஓவிய பயிற்சி பெறும் மாணவிகளைக் கொண்டு பல வடிவங்களில் விநாயகர் ஓவியங்களை தீட்டியுள்ளார்.ஆசிரியை சாந்தா, காய்கறிகளின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் உருளை, வெங்காயம், மிளகு, கத்தரிக்காய்களை கொண்டு விநாயகரை, வடிவமைத்துள்ளார்.அதே போல், இவரது மாணவிகள் நிகாழினி, ஹர்ஷினி, கிருஷ்ணவேணி, உத்ரா, ஜெரோனி ஆகியோர், கடுகு விநாயகர், புல்லிங் பேப்பர் விநாயகர், கலர் பேப்பர் விநாயகர், வாட்டர் கலர் பெயிண்ட் விநாயகர், கில்டி ஷீட்களிலான விநாயகர்களை வடிவமைத்து சாதித்துள்ளனர்.இந்த விநாயகர்களை இவர்கள் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை ஒதுக்கி வடிவமைத்துள்ளனர். ஓவிய ஆசிரியை சாந்தா தலைமையில் மாணவிகள் வடிவமைத்துள்ள வித்தியாசமான விநாயகர் ஓவியங்கள், அப்பகுதியில் உள்ள மக்களை கவர்ந்ததோடு, அவர்களும் தங்களின் பாராட்டை தெரிவித்தனர்.
01-Sep-2024