மருத்துவமனை திறப்பு
விழுப்புரம், ; விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில், காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான புற நோயாளிகள் மருத்துவமனை துவங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு டி.எஸ்.பி., ஞானவேல் தலைமை தாங்கி, மருத்துவமனை சேவையை துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் அருணாசலம் வரவேற்றார்.இம்மருத்துவமனை காலை 9:30 மணி முதல் பகல் 12:00 மணி வரை இயங்கும். ஒரு அரசு டாக்டர், ஒரு செவிலியர் தலைமையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.