மேலும் செய்திகள்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா
23-Aug-2024
விழுப்புரம் : விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., ஒன்றிய, நகர, பேரூராட்சி மாணவரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நேர்காணலுக்கு, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி, நேர்காணலை துவக்கி வைத்தார்.மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் ஜெரால்டு, அமுதரசன் நேர்காணலை நடத்தினர். மாவட்ட அமைப்பாளர் வினோத் வரவேற்றார்.மாணவரணி துணை அமைப்பாளர்கள் லெனின் விஜய், குணசேகர், அரங்கநாதன், அறிவழகன் முன்னிலை வகித்தனர்.அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், துணைச் செயலாளர் இளந்திரையன், புதுச்சேரி மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
23-Aug-2024