உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோகா நேரலை ஒளிபரப்பு

மகா சிவராத்திரியையொட்டி ஈஷா யோகா நேரலை ஒளிபரப்பு

விழுப்புரம்: மகா சிவராத்திரியையொட்டி, விழுப்புரத்தில் இன்று ஈஷா யோகா மையம் மூலம் நேரலை ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை ஈஷா யோகா மையம் மூலம் நடைபெறும் ஆன்மிக வளர்ச்சியில் மகா சிவராத்திரி விழா முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இன்று மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை நடக்கும் இந்த விழாவில், ஆதியோகி திவ்ய தரிசனம், சத்குரு மூலம் அளிக்கப்படுகிறது.மகாமந்திர தீட்சை, வழிகாட்டுதலோடு நடக்கும் தியானங்கள், அருளுரை, பிரசித்தி பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது.இந்தாண்டு, இன்று 26ம் தேதி மகா சிவராத்திரி விழாவை விழுப்புரம் மக்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம், திரு.வி.க., வீதி சண்முகா திருமண மண்டபத்தில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் பங்கேற்க வருவோருக்கு ஆதியோகி ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அனுமதி இலவசம். இத்தகவலை விழுப்புரம் ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ