மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
19-Aug-2024
விழுப்புரம் : புதுச்சேரி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் சார்பில், ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில், ரத்த தான முகாம் நடைபெற்றது.வளவனூர் அடுத்த கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரி, கோண்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு, லயன்ஸ் கிளப் தலைவர் சபாஸ்டீன் மார்ஷல் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் வெங்கடசுந்தரம், பொறியியல் கல்லுாரி முதல்வர் மகேந்திரன், டீன் டாக்டர் கனிமொழி, கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கிளப் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரத்தினசபாபதி, ரத்த தான முகாமை துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார்.ரத்த தானம் வழங்கிய கல்லுாரி மாணவ, மாணவிகள் 114 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை மண்டல தலைவர் ஜெயச்சந்திரன், வட்டார தலைவர் ரமேஷ்குமார், புதுச்சேரி சென்ட்ரல் கிளப் செயலாளர் விவேகானந்தன், பொருளாளர் ஜெகதீஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
19-Aug-2024