மகா சிவராத்திரி விழா
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடந்தது.விக்கிரவாண்டி புவனேஸ்வரி அம்மன் உடனுறை புவனேஸ்வரர் கோவில், தர்மஸபவர்த்தினி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், எசாலம் திரிபுர சுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.திரளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவெண்ணெய்நல்லுார்
திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு முதல் கால பூஜை, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 1:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், இன்று அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. சாய் நட்சத்திர நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.