உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மேல்மலையனுார் அமாவாசை, திருவக்கரை பவுர்ணமி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

மேல்மலையனுார் அமாவாசை, திருவக்கரை பவுர்ணமி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி விழா முன்னேற்பாடு பணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூட்டத்தில், அங்காளம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி அமாவாசை விழாவும், 17ம் தேதி திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி விழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக தற்காலிக கழிவறைகள், தற்காலிக பஸ் நிலையங்கள், குப்பை தொட்டிகள் அமைக்க வேண்டும்.திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதபடி போதிய போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். கூட்டநெரிசலைத் தவிர்த்திடும் பொருட்டு தடுப்பு கட்டை வசதிகளை அமைத்திட வேண்டும்.தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர் பணியில் ஈடுபட வேண்டும். சிறப்பு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். சுகாதார மருத்துவ குழுவுடன் அவசர ஊர்தியுடன் கோவில் வளாகத்திற்குட்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, ஏ.டி.எஸ்.பி., திருமால் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை