மேலும் செய்திகள்
கடும் பாறை சிலையாகுமே... குரு போதனை உளியாகுமே!
01-Sep-2024
விழுப்புரம் : 'கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும்' என டி.இ.ஓ., பேசினார். விழுப்புரத்தில் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், மாவட்ட கல்வி அலுவலர் இளமதி திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவிகளின் எண்ணிக்கை நிலவரம், ஆண்டுதோறும் தேர்வுகளில் கொடுக்கும் மதிப்பெண்களின் விபரங்களை, தலைமை ஆசிரியர் சசிகலாவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மாணவிகளிடையே அவர் பேசுகையில், 'ஆண்களுக்கு நிகராக பெண்கள் நிற்க கல்வி மிகவும் முக்கியம். கல்வியால் மட்டுமே உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியும். மாநில அளவில் தேர்ச்சி பெற வேண்டுமானால் இந்த பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சியடைய வேண்டும். ஆசிரியர் நடத்தும் பாடங்களை நன்றாக கவனிக்க வேண்டும். உங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் பெருமைப்படும்படி சிறந்த மாணவிகளாக திகழ வேண்டும்' என்றார்.
01-Sep-2024