உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காந்தி பஜாரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி துவக்கம்

காந்தி பஜாரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி துவக்கம்

செஞ்சி:' செஞ்சி காந்தி பஜாரில் பேவர் பிளாக் பதிக்கும் பணி துவங்கியது.செஞ்சி காந்தி பஜாரில் கடந்த ஆண்டு கழிவு நீர் கால்வாய் அமைத்து, புதிதாக 7 மீட்டர் அளவிற்கு தார் சாலை அமைத்தனர். இந்த தார் சாலையை ஒட்டி இரண்டு பக்கும் 10 முதல் 30 அடிவரை மண் தரை இருந்தது. மண் தரை சாலையை விட தாழ்வாகவும், மழையின் போது தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாகவம் இருப்பதால் பொது மக்கள் இருசக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக தார்சாலையில் நிறுத்தினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே மண் தரையில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து 5 கோடி ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவக்க விழாவிற்கு ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் சங்கர் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை