கமலா கல்வியியல் கல்லுாரியில் முதுகலை படிப்பு தொடங்க அனுமதி
விழுப்புரம்: கமலா கல்வியியல் கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவு தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.கமலா கல்வியல் கல்லுாரி செயலர் பிரபாகர் ஜெயராஜ், கூறியதாவது:திருநாவலுார் ஜோசப் கல்விக் குழுமம் சார்பில், ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கமலா கல்வியியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கலைக் கல்லுாரி 2000ம் ஆண்டு துவங்கப்பட்டு 22 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு இணையான கல்வியை இக்கல்லுாரி வழங்கி வருகிறது.ஆராய்ச்சி பாடப் பிரிவில். கணினி அறிவியல், வணிக மேலாண்மை, கணிதம், வணிகவியல், ஆங்கிலம், தமிழ் போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயின்று ஆராய்ச்சி பட்டங்களை பெற்றுள்ளனர்.கமலா கல்வியியல் கல்லுாரி 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2015ம் ஆண்டு எம்.எட்., பாடப்பிரிவு துவங்க விண்ணப்பிக்கப்பட்டு, தற்போது 2024ம் ஆண்டு எம்.எட்., வகுப்புகள் துவங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இக்கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் எம்.எட்., பாடப்பிரிவில் சேரலாம். இரு கல்லுாரிகளும் ஐ.எஸ்.ஓ. 90001 சான்றிதழ் பெற்றது. பல்கலை மானியக் குழுவின் '2எப்'அந்தஸ்தை பெற்றது. மத்திய அரசின் சிறுபான்மை கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இவ்விரு கல்லுாரிகளும், மாணவர்களின் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.