உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரெட்டணை கென்னடி பள்ளி ஆண்டு விளையாட்டு விழா 

ரெட்டணை கென்னடி பள்ளி ஆண்டு விளையாட்டு விழா 

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட் ரிக் மேல்நிலைப் பள்ளியில் 48வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி தாளாளர் சண்முகம் தலைமை தாங்கினார். முதல்வர் சந்தோஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து பேசினார்.முதன்மை விருந்தினர் திண்டிவனம் பி.ஆர்.எஸ்., துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார்.பள்ளி நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, கோலாட்டம், யோகா, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாக அலுவலர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ