மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கு
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் உயிர் வேதியியல் துறை, முதுகலை ஆராய்ச்சி துறை சார்பில் கருத்தரங்கு நடந்தது.உயிர் வேதியியல் துறை தலைவர் கலைமதி தலைமை தாங்கினார். தஞ்சாவூர், பூண்டி ஏ.வி.வி.எம்., புஷ்பம் கல்லுாரி விலங்கியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப துறை பேராசிரியர் கணேசன், 'வாழ்க்கை அறிவியலை புரட்சிகரமாக்குதல், எதிர்காலத்திற்கான ேஹக்கத்தான்' என்ற தலைப்பில் பேசினார். உதவி பேராசிரியர் கார்த்திகா நன்றி கூறினார்.