உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாமியார் வீட்டிற்கு தீ மருமகன் கைது

மாமியார் வீட்டிற்கு தீ மருமகன் கைது

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு தீ வைத்த மருமகனை போலீசார் கைது செய்தனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலாப்பாடியைச் சேர்ந்தவர் நுார்ஜகான், 55; இவருடைய மூத்த மகள் யாஸ்மினியை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், ஷேக் ஜமால் மகன் ேஷக் அலி, 40; என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ேஷக் அலி, திருமணத்திற்கு பிறகு, மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார்.இவர், தினமும் குடித்து விட்டு மாமியார் மற்றும் பிள்ளைகளிடமும், தகராறு செய்வது வழக்கம்.நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு செய்து, நுார்ஜகானின் கூரை வீட்டிற்கு தீ வைத்தார். இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமானது. சங்கராபுரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். நுார்ஜகான் கொடுத்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் ேஷக் அலியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை