உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கம்

கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கம்

திருவெண்ணெய்நல்லுார்: பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிலரங்கம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஆலை நிர்வாக இயக்குனர் முத்து மீனாட்சி தலைமை தாங்கினார். கரும்பு அலுவலர் ரங்கராஜன் வரவேற்றார். கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் துரைசாமி, சதீஷ்குமார், மற்றும் அனிதா ஆகியோர் இயற்கை முறையில் கரும்பு சாகுபடி செய்தல். பூச்சி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துவது.முக்கிய கரும்பு ரகங்களின் செயல்பாடுகள் மற்றும் கரும்பு சம்பந்தமான தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறி விவசாயிகள் பயன்பெற அறிவுறுத்தினர்.கரும்பு அலுவலர்கள் ஆனந்த ஜோதி, சஞ்சீவி ராமன், ஆரோக்கியராஜ் மற்றும் கரும்பு உதவியாளர்கள், விவசாயிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கரும்பு அலுவலர் முருகேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை