உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை விபத்தில் வாலிபர் பலி 

சாலை விபத்தில் வாலிபர் பலி 

திண்டிவனம்: லாரியின்பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி யதில் வாலிபர் இறந்தாபெங்களூருவிலுள்ள கங்கம்மா சர்க்கில் பகுதி யில் வசித்தவர் ஹரிஆனந்த், 33; இவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில், திண்டிவனத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார்.திண்டிவனம் - செஞ்சி சாலையிலுள்ள கொணக்கம்பட்டு பஸ் ஸ்டாப் அருகே வந்த போது, முன்னால் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.இதில் பலத்த அடிபட்டு அவரை தீவிர சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஆனந்த் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார். விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை