மேலும் செய்திகள்
கரூர் பஸ் ஸ்டாண்டில்ஏர்ஹாரன்கள் பறிமுதல்
23-Mar-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்திய 8 பஸ்கள் உட்பட 10 வாகனங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில் பஸ்கள், கனரக வாகனங்கள் அதிவேகமாக இயங்குவது, காதுகளை செவிடாக்கும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, புதுச்சேரி, கடலுார் மார்க்கத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள், மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி ஏர் ஹாரன்களை பயன்படுத்தி, காது ஜவ்வு கிழியும் வகையில் அதிக சத்தம் எழுப்புவதாக புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன், ஸ்ரீதர், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கலெக்டர் வளாகம் எதிரே திருச்சி சாலையில் நேற்று ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரி, கடலுார், திண்டிவனம் மார்க்கமாக சென்ற 8 தனியார் பஸ்கள், 2 லாரிகளில் இருந்த ஏர் ஹார்ன்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒவ்வொரு வாகனத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
23-Mar-2025