உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 15 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு போலீஸ் வலை

15 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு போலீஸ் வலை

திண்டிவனம்; திண்டிவனம் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15வயது சிறுமி. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு, பேக்கரியில் வேலைசெய்து வந்துள்ளார். அப்போது அதே பேக்கரியில் கேக் மாஸ்டராக ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்ததினேஷ்குமார் வேலை செய்துவந்தார். இவர் கடந்த ஆண்டு ஜூலை 15ம் தேதி, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தான் கர்பமானது தெரிந்த சிறுமி தன்னை திருமணம்செய்து கொள்ளுமாறு தினேஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துவிட்டார்.இந்நிலையில் சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். இது பற்றி அறிந்த அவரது பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில்தினேஷ்குமார்மீது புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மகளிர் போலீசார் தினேஷ்குமார் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை