உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அஸ்வினி மருத்துவமனையில் 150 லேசர் அறுவை சிகிச்சை; டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்

அஸ்வினி மருத்துவமனையில் 150 லேசர் அறுவை சிகிச்சை; டாக்டர் வெங்கடேஷ் பெருமிதம்

விழுப்புரம் நேருஜி சாலையில் அஸ்வினி மருத்துவமனையில், கடந்த ஓராண்டில் 150 லேசர் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக, டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:எங்களது மருத்துவமனையில் மூலம், பவுத்திரம், வெடிப்புகளுக்கு லேசர் சிகிச்சை செய்யப்படுகிறது. மேலும், அப்பண்டிக்ஸ், பித்தப்பை கல், குடலிறக்கம், கர்ப்பப்பை அகற்றுதல், கர்ப்பப்பை கட்டி மற்றும் அகற்றுதல், சினைப்பை கட்டி அகற்றுதல் துளை அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படுகிறது.மேலும், எண்டோஸ்கோபி சிகிச்சை முறை மூலம் வயிறு பரிசோதனை, மலக்குடல், பெருங்குடல் பரிசோதனை செய்யப்படுகிறது.இது மட்டுமின்றி, தைராய்டு, மார்பக கட்டி, விரைவீக்கம், தீராத கல்புண், கால் நரம்பு சுற்று உட்பட அனைத்து வகை கட்டிகளுக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது. லேசர் மற்றும் லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை பெற்றோர், ஒரே நாளில் வீடு திரும்பலாம்.அனைத்து வகை அறுவை சிகிச்சைகளும், பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.இவ்வாறு டாக்டர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை