மொபைல் போன் திருட்டு 2 பேர் கைது
செஞ்சி : வட மாநில இளைஞரி டம் மொபைல் போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரபிரதேச மாநிலம், சித்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷரீப் மகன் தீன் முகமது 25; விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி, தார்பாய் வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த 16ம் தேதி வியாபாரத்திற்கு சென்ற போது பனமலை ஏரி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றார்.திரும்பி வந்தபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் போன், மற்றும் 500 ரூபாயை 2 பேர் திருடிக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றதை பார்த்துள்ளார்.இது குறித்து உடனடியாக அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், நடத்திய விசாரணையில் பனமலையைச் சேர்ந்த ராம்குமார், 19; மற்றும் சி.என்.,பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவனும் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.