உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் கைது

மயிலம் அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் கைது

மயிலம்: மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஐவேலி கிராமம் அருகே சவுக்கு தோப்பு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டு இருந்த நபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். பிடிபடடவர்களிடம், 100 மில்லி அளவுள்ள 50 பாக்கெட் சாராயத்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக விக்கிரவாண்டி தாலுக்கா மதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் 37; பொன்னம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விஜயபிரபாகரன் 28; என்பது தெரியவந்தது.பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ